BREAKING NEWS

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக துவங்கிய எருது விடும் திருவிழா ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லாததால் சிக்கல். விழா குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக துவங்கிய எருது விடும் திருவிழா  ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லாததால் சிக்கல். விழா குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.

அணைக்கட்டு, வேலங்காடு கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக எருது விடும் போட்டி துவங்கி நடைபெற்றதால் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேலங்காடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் எருது விடும் போட்டியானது நடைபெறுவது வழக்கம் அதே போன்று இன்று நடைபெற்ற எருது விடும் விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் காலை 10 மணி முதல் 2 மணி வரை எருது விடும் போட்டி நடத்திக் கொள்ள நேரம் ஒதுக்கி இருந்த நிலையில் விழா குழுவினர் காலை 7:00 மணி முதல் காளைகள் விட துவங்கியதால் அந்த நேரங்களில் காளைகள் முட்டி படுகாயம் அடைந்த 5க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 

மேலும் காளை விடும் விழாவில் அதிகமான காளைகள் விடுவதினால் கிடைக்கும் வருவாயை கருத்தில் கொண்டு விழா குழுவினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது மேலும் காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய போட்டியை 7:00 மணிக்கு துவங்கியதால் பாதுகாப்பிற்கு வரவேண்டிய அனைத்து துறை அலுவலர்களும் மருத்துவ குழுவினரும் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

 

தொடர்ந்து காலை 10.00 மணிக்கு மீண்டும் அதிகாரிகள் வந்த பின்னர் பெயரளவிற்கு உறுதிமொழி ஏற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்று மீண்டும் காலை விடும் போட்டியானது நடைபெற துவங்கியது.

 

மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக காளை விடும் போட்டியை நடத்திய விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS