அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ED சோதனை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி வீட்டில் சோதனை
திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி வீட்டில் இன்று அதிகாலை முதலே கோவை கொச்சின் ஆகிய பகுதியில் இருந்து வந்த அமலக்கத்துறையினர் ஐந்து குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்
மேலும் அவரது மகன் ஐ பி செந்தில்குமார் வீடு அமைந்துள்ள சிலப்பாடியிலும் மற்றும் திண்டுக்கல் ரவுண்டு ரோடு புதூர் பகுதியில் அமைந்துள்ள அவரது மகள் இந்திரா இந்திரா வீட்டிலும் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்
அதேபோன்று வத்தலகுண்டு பகுதியில் உள்ள பண்ணை வீடு தோட்டம் ஆகிய பகுதியிலும்
இருளப்பன் மற்றும் கெயினி ஆகிய இரு நூற்பாளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது
சோதனை குறித்த செய்தி வெளியானவுடன் கட்சியினர் அதிகப்படியானோர் ஐ பெரியசாமி வீட்டின் முன்பு குழுமியுள்ளனர்