அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தினர்.
தேனி மாவட்டம்,
போடிநாயக்கனூரில் தனியார் திருமண மண்டபத்தில் விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பாண்டி குமார் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமை நடத்தினர்.
இதில் சிறப்பு விருந்தினராக அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த ரத்ததான முகாமில் நகராட்சி சேர்மன் ராஜேஸ்வரி சங்கர் துவக்கி வைத்தார் இதில் மருத்துவர் ரவீந்திரநாத் காங்கிரஸ் போடி ஒன்றிய தலைவர் ஜம்பு சுதாகர் மற்றும் திராவிட கட்சியை சேர்ந்த தி.க ரகுநாதன் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரத்ததான முகாம் பற்றியும் ரத்த தேவைகளை பற்றியும் எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததான முகாமில் குருதிக்கொடை வழங்கினர் இந்த நிகழ்ச்சியினை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பாண்டி குமார் விழா ஏற்பாடு செய்திருந்தார்.