BREAKING NEWS

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு!!

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு!!

ராணிப்பேட்டை அரக்கோணம் ரெயில் நிலையம், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதற்கான சீரமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை கோட் ரெயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளை அகலப்படுத்தி, வடக்கு பகுதி நிலையம் வரை நீட்டிப்பு செய்வது, நடைமேடை மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார் அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் தலைவர் நைனா மாசிலாமணி மற்றும் பொது செயலாளர் குணசீலன் ஆகியோர் கோட்ட மேலாளர் கணேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

 

அதில் வடக்கு பகுதியில் உள்ள முகப்பு பகுதியின் நடைமேடைக்கு லிப்ட், அனைத்து நடைமேடைகளிலும் நகரும் படிகட்டுகள், நவீன கழிப்பறைகள் மற்றும் வடக்கு பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள இடத்தில் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். ஆய்வின் போது ரெயில்வே துறையின் பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

Share this…

CATEGORIES
TAGS