அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்வதாக திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்தும் ரத்து செய்யாததை கண்டித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளொரு திட்டத்தை அறிவித்து வரும் இந்த அரசு தேர்தல் நேரத்தில் வெற்றி பெற செய்த அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத இந்த அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க பொறுப்பாளர் பேச்சு
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கம் தலைமையில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த சிபிஎஸ் ஒழிப்பு இயக்க போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் இரவு பகலாக இரண்டாவது நாளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில்தேர்தல் நேரத்தில் எண்:309 ன் படி ( வாக்குறுதி) அறிவித்தபடி திமுக தலைமையிலான தமிழக அரசு அரசு ஊழியர்களின் சிபிஎஸ் ஒழிப்புத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கோரியும், இல்லையெனில் அடுத்த மாதம் சென்னையில் 72 மணி நேரம் நடைபெறவுள்ள போராட்டத்தை தொடர்ந்து சிபிஎஸ் இயக்கத்தின் சார்பில் போராட்டங்கள் தொடரும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்ததால் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அயராமல் பாடுபட்டு திமுக அரசை வெற்றி பெற செய்தோம் ஆனால் அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் நாளொரு திட்டத்தை அறிவித்து வரும் நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை செவி சாய்க்காத இந்த அரசுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாட புகட்ட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். இதில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராமு, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சற்குணகுமார் ,வட்ட பொறுப்பாளர் பிரகாசம் மற்றும் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்