அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் விலையை விட 5 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. மது பிரியர்கள் வேதனை.

வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் ரோட்டில் உள்ளது.
கடந்த சில நாட்களாக விலை குறைவான சரக்குகள் மாணிட்டர், ஓல்டு சிப், ஓல்டு மாஸ்டர், டைமண்ட், ஓல்டு மேன் ஆர்மி, ரம் பிராந்தி சில்லறை விற்பனைக்கு இருப்பதில்லை, மேலும் எல்லா சரக்கும், விலையை விட 5 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது.
வசதி குறைவான மது பிரியர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அரசு அனுப்பும் விலை குறைவான சரக்குகள் என்ன ஆகின்றது..??? மேலும் 5 ரூபாய் கூடுதல் கட்டணம் எதற்கு வசூலிக்கப்படுகிறது. பல குடும்பத்தை சீரழித்து வரும் பணத்தில் கூட கமிஷனா?
என பலர் பொருமி வருகின்றனர். அந்த மதுபான கடையில் அனுமதியில்லா பார் வேறு அங்கு சரக்கு குடிக்கும் குடி மகன்கள் சாப்பாடு போடும்படி வராஹி அம்மன் ஆசிரமத்தில் தகராறு வேறு செய்கின்றனர்.
CATEGORIES வேலூர்
TAGS குற்றம்டாஸ்மாக்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பறீராமாபுரம்பள்ளிகொண்டாமதுபான கடைமுக்கிய செய்திகள்வராஹி அம்மன் ஆசிரமம்வேலூர் மாவட்டம்