BREAKING NEWS

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

வேலூர் மத்திய சிறையில் உள்ள இவருக்கு திடீரென மூச்சு திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சிறை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறை காவலர்கள் ராஜாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜா திடீரென நேற்று (22.04.2023) வார்டில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

 

இதனை அடுத்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தப்பியோடிய கைதி ராஜா, மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்தில் ஏறி சென்றது பதிவாகியுள்ளது.

 

இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் தொடர்ந்து பல நூறு சிசிடிவி காட்சிகளை பின் தொடர்ந்து ஆய்வு செய்து தேடிவந்த நிலையில் தப்பியோடிய விசாரணை கைதி ராஜாவை ஆந்திர மாநிலம் சித்தூரில் இருப்பது தெரியவந்து சிறை காவலர்கள் அவரை சித்தூரில் வைத்து கைது செய்து மீண்டும் மத்திய சிறையில் அடைத்தனர்.

Share this…

CATEGORIES
TAGS