BREAKING NEWS

அரியமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ஆட்டோ டிரைவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரைகளையும், ஆலோசனையும் வழங்கினார்

அரியமங்கலத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க  ஆட்டோ டிரைவர்களுக்கு காவல் ஆய்வாளர்  அறிவுரைகளையும், ஆலோசனையும் வழங்கினார்

குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் ரயில் நகர் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்களுக்கு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் சில அறிவுரைகளை வழங்கினார்.

அதில் அடையாளம் தெரியாத நபர்களை ஆட்டோவில் ஏற்ற கூடாது என்றும், ஆட்டோவில் பயணிப்பவர் சந்தேகபடும்படியான நபராக இருந்தால் அவரை போட்டோ எடுத்து வைத்து கொள்ள வேண்டும் என்றும், அப்படி சந்தேகபடும்படியான நபராக இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோ டிரைவர்கள் இருக்க கூடாது எனவும் கூறினார்

Share this…

CATEGORIES
TAGS