ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் அசிசி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 110 மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆலங்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் நிக்சன் என்ற நபர் பாலியல் ரீதியாகவும் ஆபாசமாக பேசியும் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பள்ளி நிர்வாகி அந்தோணி சேவியரிடம் அந்த ஆசிரியை புகார் அளித்துள்ளார். எனினும் அந்தோணி சேவியர் தொல்லை அளித்த நபருக்கு ஆதரவாக பேசியதுடன், இதெல்லாம் இப்பள்ளியில் சகஜம், விருப்பம் இல்லாவிட்டால் வேலையை விட்டு நின்று விடலாம், இது குறித்து வெளியில் கூறினால் நடப்பது வேறு என மிரட்டியதாகவும்,

இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் நியாயம் கேட்பதற்காக ஆசிரியை தனது உறவினர்களுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டார். எனினும் நிர்வாகம் தரப்பில் எவரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீஸார், அந்த ஆசிரியையிடம் புகார் மனு பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இச்சம்பவம் ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
CATEGORIES குற்றம்
TAGS அசிசி பள்ளிஆலங்குளம்கல்விகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசிதென்காசி மாவட்டம்பாலியல் தொல்லைபாலியல் ரீதியாக தொல்லைமுக்கிய செய்திகள்