BREAKING NEWS

ஆண்டிபட்டியில் அறிஞர் அண்ணா 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பாக அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆண்டிபட்டியில் அறிஞர் அண்ணா 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பாக அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்டம் சார்பாக ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தவச்செல்வம், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஸ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

 

இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் வஜ்ரவேல், வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் அய்யணன்,  அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் வெற்றிவேலன், பேரூர் கழக இணை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )