ஆலங்காயம் அருகே கடந்த 3 நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நசகுட்டை வழியாக விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒரு ஒற்றை யானை உமையப்ப நாயக்கணுர், அருணாசலம் கொட்டாய் வழியாக ஊருக்குள் புகுந்துள்ளது.
மேலும் இந்த ஒற்றை யானை விவசாய நிலத்தில் புகுந்து பழனி என்பவர் பயிரிட்டு இருந்த நெற்பயிரை சேதம் செய்துள்ளது.மேலும் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு அதே பகுதியில் சுற்றி திரியும் இந்த ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
கிராம மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வரும் அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS ஆலங்காயம் வனப்பகுதிஊருக்குள் புகுந்த யானைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடிவிவசாய நிலத்திற்குள் புகுந்த ஒரு ஒற்றை யானை