BREAKING NEWS

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார்.

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந்தேதி (நேற்று) தொடங்கி இம்மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

 

இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக, ‘கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

 

இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். அங்கு 4 மணிக்கு நடைபெறும் அந்த கருத்தரங்கில் அவர் பங்கேற்கிறார்.

 

அந்த கருத்தரங்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் முக்கிய உரை ஆற்றுகின்றனர்.

 

அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு திரும்புகிறார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )