BREAKING NEWS

இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் எம்எல்ஏ பங்கேற்பு.

இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் எம்எல்ஏ பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா.

 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள் கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.

 

 

இந்த போட்டியில் வெற்றி மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு பரிசு கோப்பைகளையும், பரிசு தொகையையும் வழங்கினார்.

 

 

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் அவர்களும் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன் அவர்களும், விவசாய அணி காளிமுத்து அவர்களும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த கிளைக் கழகச் செயலாளர் சத்தியேந்திரன் அவர்களும், கழக நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS