உடுமலை அருகே எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிராமப்புறங்களைச் சார்ந்த ஏழை எளிய மக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக இன்று உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடுங்கையம் துணை சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமில் சர்க்கரை நோயின் அறிகுறிகள் குறித்தும் நோய் வராமல் காப்பது குறித்தும் நோய் வந்தபின் எவ்வாறு உணவு மற்றும் மருந்து உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பொது மக்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் உமாராணி விளக்கமளித்தார். முகாமில் சரிவிகித ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சி இடம்பெற்றது.
சுகாதார ஆய்வாளர்கள் முருகன் பால் பாண்டியன் செவிலியர்கள் மணிமேகலா தேவி பிரியா உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது தொடர்ந்து அனைவருக்கும் ராகி கூழ் வழங்கப்பட்டது.