உடுமலை குடிமங்கலம் அதிமுக எம். எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குடிமங்கலம் அருகே மூங்கில் தொழுவு அருகே குடிமங்கலம் அதிமுக எம். எல். ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில்
கடந்த மூன்று ஆண்டுகளாக வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் குடும்பத்துடன் தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் 5ம் தேதி இரவு சுமார் 11:30மணிக்கு காவல்துறை அவசர உதவி எண் 100 க்கு தொடர்பு கொண்டு
குடிமங்கலம் அருகே உள்ள
அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் குடியிருக்கும் தந்தை, மகனுக்கிடையே கடும் சண்டை நடப்பதாகவும், சண்டையில் மகன், தந்தையை சரமாரியாக தாக்கியதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் இருப்பதாகவும், உடனே காவல்துறையினரை அனுப்புமாறு கூறியுள்ளனர்.
உடனே காவல்துறை அவசர மையத்திலிருந்து குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினரை அனுப்புமாறு கூறியுள்ளனர் .
இரவு ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேலுக்கு தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு செல்லுமாறு காவல் நிலையத்திலிருந்து கூறியுள்ளனர்.
அதனையடுத்து அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்திற்கு ரோந்து வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் சண்டை போட்டுக் கொண்ட
தந்தை, மகனை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். மகன் தாக்கியதில்
தந்தை மூர்த்தி படுகாயங்களுடன் இருப்பதால் அவரை மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக
108 ஆம்புலன்ஸூக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் தகவல் கொடுத்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் உயிரிழந்தார் இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது