உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் சார்பில் தீக்கலால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் சார்பில் தீக்கலால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சிக்கியவர்களைஉடனடியாக எப்படி மீட்க வேண்டும் என்பது குறித்தும் செயல் விளக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு செயல்விளக்க முறையை உடுமலைப்பேட்டை தீயணைப்பு துறையினர் செய்து காட்டினார்.

அப்போது சிலிண்டரில் ஏற்படும் தீவிபத்தும் அதில் காயம் ஏற்பட்டவர்களுக்கு முறையாக எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தும்வாகனங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்தும் மேலும் பல்வேறு விபத்துக்களை தடுக்கும் வகையில்பொது மக்களின் நலன் கருதி உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் ஆகியோர் முன்பு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கம்செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பின்பு இதனை பார்த்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தங்களது நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
