உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளி பின்புறம் கொட்டப்பட்டிருக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஏரிபாளையம் குடியிருப்புப் பகுதிகள் உள்ள குப்பைகளை பாலித்தின் கவர்களில் கட்டி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி பின்புறம் பொதுமக்கள் கொட்டி செல்கின்றனர்.

இதனால் பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டு வருவதாக இது குறித்து நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற குப்பைகளை கொட்டுவதற்கான தலையிடும் ஒதுக்கப்படவில்லை எனவும்,..
வாரக்கணக்கில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS ஆன்மிகம்உடுமலைப்பேட்டைஏரிப்பாளையம் அரசு மேல்நிலைபள்ளிகல்விகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்
