BREAKING NEWS

உடுமலைப்பேட்டையில் பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.

உடுமலைப்பேட்டையில் பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான திரு.M.மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கேர் டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் உடுமலைப்பேட்டை அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது.

 

 

இதில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த சட்ட கருத்துரைகள் நமது பட்டியல் வழக்கறிஞர்கள் R.மகேஸ்வரன், M.சத்தியவாணி, C.மகாலட்சுமி, J. தம்பிபிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.

 

மற்றும் கேர் டி நிறுவனத்தின் நெட்வொர்க் ஒருங்கிணைப்பாளர் மற்றும் திருப்பூர் மக்களமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மெல்வின், கேர் டி நிறுவனத்தின் பஞ்சாலை பயிற்சியாளர் லீனா ஜஸ்டின், ‘சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் முதியோர் உதவி மாவட்ட களப்பொறுப்பு அலுவலர் மைதிலி, சார்க் டிரஸ்ட் தலைவர் சாமிநாதன் துரை அவர்களும் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஆணைய பணியாளர் கள் மற்றும் தீபம் அறக்கட்டளை யின் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS