உடுமலையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழக்கறிஞர் மன்றம் சார்பில் உடுமலையில் பாராட்டு விழா.!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழக்கறிஞர் மன்றம் சார்பில், மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ள, நீதிபதி வடமலை மற் றும் மூத்த வக்கீல்களுக்கு பாராட்டு விழா உடுமலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. உடுமலை பார் வழக்கறிஞர் மன்ற தலைவர் மனோகரன் வரவேற்றார்.
நீதிபதி வடமலை பேசியதாவது: உடுமலையில், பிறந்து, அரசு பள்ளி, கல் லுாரியில் படித்து, இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக பகவி ஏற்றுள்ளேன். அந்த
காலத்தில், சீனியர் வக்கீல்கள், சிறிய நோட் புத்தகத் தில், வழக்கு சம்பந்தமான அனைத்து தகவல்கள், ஆதரவாக வந்துள்ள தீர்ப்புகள், சட்ட நுணுக்கங்களை வைத்திருந்தனர்.
இன்று கம்ப்யூட்டரை தட்டினால், அனைத்து தகவல்களும் கிடைத்து விடுகிறது. இளம் வக்கீல்கள், படித்து முடித்ததும், அலுவலகம் திறந்து, வழக்காட வேண்டும் என நினைக்க வேண்டாம். குறைந்தபட்சம், 3 ஆண்டுகளாவது, சீனியர் வக்கீல்களிடம், வக்கீல் தொழிலை நன்கு கற்க வேண்டும்.
அதே போல், நீதிபதி களுக்கான காலிப்பணியி டங்கள் அதிகளவு உள்ளது. இளம் வக்கீல்கள், நீதிபதிக்கான தேர்வுகள் எழுத முன் வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜெ நடராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி
நாகராஜன், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி புகழேந்தி மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர். வழக்கறிஞர் மன்ற செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.