BREAKING NEWS

உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு செவிலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பேரணி.

உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு செவிலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் பேரணி.

உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.

 

 

உலக தற்கொலை தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மருத்துவக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு போணி நடந்தது.

 

 

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் வாயிலில் இருந்து துவங்கிய பேரணியை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவண குமார் தொடங்கி வைத்தார். பேரணியில் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு,உடல் நலம் போன்றதே மன நலம்” மருத்துவ ஆலோசனை நலம் தரும்.

 

 

வாழ்வை கொண்டாடுவோம் அவசர முடிவு தவறு. ஆலோசனை பெறுவது சிற்பு.

 

வாழ்க்கை ஒரு கடினமான உண்மை வென்று காட்டும் மனவலிமை. என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். பேரணி மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நிறைவடைந்தது.

 

 

அங்கு நடைப்பெற்ற கருத்தரங்கில் பேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருது துரை இந்திய அளவில் தற்கொலை நடைபெறும் மாநிலத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளதாக கூறினார், கருத்தரங்க கலை அரங்கில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )