உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு சதஸ் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது,
இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதந்து கட்டிடகலையை பார்த்து வியக்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரியகோவிலில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மனுக்கு சதஸ் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது.
மேலும் நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நிவேதா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்