உலக புத்தக தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வி.பி.ஜெயசீலன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் புத்தகம் ஒரு மனிதனை மேன்மையாக்குகிறது என்றும் புத்தகம் படிப்பதன் மூலம் அறிவு மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்து கூறினார்.
நிகழ்வில் கல்லூரிச் செயலர் முனைவர் எஸ்.சிங்கராஜ், முதல்வர் முனைவர் த.வெங்கடேஸ்வரன், வட்டாட்சியர் திரு.ராமச்சந்திரன், கல்லூரி பேராசிரியர்கள், ராஜுக்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் முறம்பு ஆதி திராவிடர் நல விடுதி மாணவிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.