உலக ரேபீஸ் நோய் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ரேபீஸ் நோய் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மருத்துவர் யோகேஸ்வரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சரவணன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஆய்வாளர் சம்பத் அனைவரையும் வரவேற்றார்.
மருத்துவர் யோகேஸ்வரன் பேசுகையில், ரேபீஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களை நேரடியாக கடிப்பதாளோ அல்லது அவ்விலங்குகளால் கடிப்பட்ட பிறகு விலங்குகள் மூலமோ ரேபீஸ் நோய் பரவுகிறது. ரேபீஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை முதன் முதலில் 1885ல் லூயிஸ்பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார்.
நம் வீட்டில் வளர்க்கும் செல்ல விலங்குகளிடம் கவனமாகவும் தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின் உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபீஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்த உடன் அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு கழுவ வேண்டும்.
வெறி நாய் கடியின் மூலம் பரவும் ரேபீஸ் வைரஸ் மனித மூளையை பாதிக்கிறது. வெறி நாய் கடி நோய் காயம் கீறல் அல்லது பாதிக்கப்பட்ட ஒரு மிருகத்தின் வாய் வழியாக வெளிப்படும் சளி உமிழ் நீர் இந்த வைரஸ் பரவுகிறது.
மனித உடலின் காயமற்ற பகுதியின் வழியாக இந்த வைரஸ் பரவாது மனித தோல் அல்லது தசை பகுதியை அடைந்த வைரஸ் தண்டுவடத்திற்கு மூளைக்கும் முன்னேறுகிறது. வைரஸ் மூளையை எட்டியவுடன் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகள் தோன்றுகின்றன என்றார்.
தொடர்ந்து நான் எனது வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ எவரை ஏதேனும் நாய் மற்றும் இன்றி பூனை மற்றும் விலங்குகள் கடிக்கும் போது அவர்களை ரேபீஸ் தடுப்பூசி முழுமையாக போட்டுக் கொள்ளும்படி கூறுவேன்,
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி பாதுகாத்துக் கொள்வேன் என மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பகுதி சுகாதார செவிலியர் கலைவாணி குழந்தைகள் ஊட்டச்சத்து மைய பணியாளர்கள் ரஞ்சினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
