ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் செல் போன் டவர் மீது தற்கொலை முயற்சி.

தேனி மாவட்டம் கோட்டூரில் புதிய தமிழகம் கட்சியின் முன்னால் மாவட்ட துணைச்செயலாளர் கருப்புத்துரை, கோட்டூரில் செல் போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி.
கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கருப்புத்துரை மனைவியை தாக்கியுள்ளார். வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் கருப்புத்துரை தகப்பனார் பயன்பாட்டில் உள்ள இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் அகற்றியதால் இன்று செல்போன் டவர் ஏரி, தற்கொலை முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கருப்புரை மகன் புகார் தெரிவித்தார்.
CATEGORIES தேனி