ஊழியர்களுக்கு 50% ஊதிய உயர்வு! நிலுவை தொகை வழங்கவும் பரிசீலனை! கோ- ஆப்டெக்ஸ் அறிவிப்பு!

கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கும் பெயர்போன இடம் கோ ஆப்டெக்ஸ் நிறுவனமாகும். அங்கு எண்ணற்ற ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கோ – ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாளர் லட்சுமி, அந்நிறுவன ஊழியர்களுக்கு 50 சதவீத ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, ‘‘பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால் மதிய உணவு இடைவெளியின் போது கோ& ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கைசெலவுத் தொகை ரூ.130ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் விடுமுறை நாட்களில் பணிபுரிய வழங்கப்பட்ட கைசெலவுத் தொகையானது ரூ.250ல் இருந்து ரூ.500 ஆக இரட்டிப்பு செய்யப்பட்டு வழங்கப்படும். இந்த நிலுவைத் தொகையானது கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று கூறினார்.

கோ&ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிதி நிலைமையை கணக்கில் கொண்டு ஊழியர்களுக்கு 50 சதவீத ஊதிய உயர்வு நிலுவைத்தொகை மற்றும் ஈட்டிய விடுப்பு வித்தியாச நிலுவைத் தொகைகள் வழங்க பரிசீலனை செய்யப்படும். தமிழக அரசிடம் அரசுக்கு இணையான வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்கக் கோரி ஏற்கனவே முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘‘சரக்கு இருப்பு குறித்து பரிசோதனை செய்யப்படும் போது, ஒரு நிதியாண்டில் சரக்கு இருப்பு குறைவுப்படி விற்பனையில் 0.15 சதவீதம் அதிகபட்சம் ரூ.20 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதனால் நீண்ட நாள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் கோ&ஆப்டெக்ஸ் ஊழியர்கள் இருக்கின்றனர். நிலுவைத் தொகையும் விரைவில் வழங்கப்பட்டு விட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்று சில ஊழியர்கள் கூறி வருகின்றனர்.
