BREAKING NEWS

எடப்பாடியில் இன்று 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துச் சென்றனர். பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்.

எடப்பாடியில் இன்று 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துச் சென்றனர். பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எடப்பாடியில் இன்று 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கரைத்துச் சென்றனர். பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

 

நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 

அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடியை சுற்றியுள்ள பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி அன்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும், அப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் எடப்பாடியில் இருந்து ஊர்வலமாக நான்கு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, எல்லமடை, மூலப் பாதை, போன்ற பகுதிகளில் உள்ள கால்வாயில் கரைத்து செல்கின்றனர்.

 

 

இதற்கிடையே, கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில் காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு பணியினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )