எடப்பாடியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த நபர் கைது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த தகவல் எடப்பாடி காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மது பாட்டில்களுடன் கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சுமார் 43 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கார்த்திக்கை போலீசார் சிறையில் அடைத்தனர்.
CATEGORIES சேலம்
