ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்- சாரல் மழை கடும் குளிரால் உள்ளூர் வாசிகள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சுற்றுலாா பயணிகள் மகிழ்ச்சி.

சேலம் மாவட்டம்,
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வருகிறது.
இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து அதிகளவில் மக்கள் வந்து, ஏற்காட்டில் தங்கியிருந்து இயற்கையை ரசிப்பது வாடிக்கை அப்போது மழை கடும் பணி மாறி மாறி இயற்கை இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி இருந்த போதிலும் உள்ளூர் வாசிகள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றன.
மேலும் சுற்றுலா தளங்கள் அனைத்திலும் ஒரு சில சுற்றுலா பணிகளை காண முடிகிறது வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு ஏறி விட்ட வண்ணம் செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள் கடும் பனிமூட்டத்தைக் கண்டு சுற்றுலா பயணிகள் இன்பமாக செல்பி எடுத்தும் இயற்கை ரசித்து வருகின்றனர்.