ஏலகிரிமலை ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு.

திருப்பத்தூர் செய்தியாளர் பா. சிவக்குமார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது.
பிளாஸ்டிக் குப்பைகளை தரம் பிரித்து உலர்ந்த பிளாஸ்டிக் குப்பைகளை இயந்திரத்தின் மூலம் சிறு துண்டுகளாக்கி மீண்டும் மறு சுழற்சி முறைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தினை உதவி திட்டஅலுவலர் வீடு மற்றும் சுகாதார அலுவலர் ஆப்தாப்பேகம் அவர்கள் மற்றும் ஏலகிரிமலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் அவர்கள் தலைமையில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களை வெகுவாக பாராட்டினார்.
உடன் கிராம செயலாளர் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்