ஐந்தாண்டு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள் அடுத்த ஐம்பதாண்டு வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவோம். கும்பகோணத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

தஞ்சை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பேரூராட்சித் தலைவர்
ம.க.ஸ்டாலின், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், சமூகநீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் மாவட்ட தலைவர் அமிர்த.கண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அரை நூற்றாண்டுகளுக்கு மேல் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து உள்ளது. திராவிட மாடல் தற்போது புதியதாக ஒரு வார்த்தை உருவாகி வருகிறது. அந்த திராவிட
வார்த்தை தோல்வி அடைந்துள்ளது. நம்முடைய மாடல் பாட்டாளி மாடல் மட்டுமே, பாமக
2.0 என்பது அனைவருக்குமான வளர்ச்சி.திராவிட மாடல் ஆட்சி என்பது அதிமுக, திமுகவிற்கு உள்ளடக்கியதா என்பதை விளக்க வேண்டும்.
கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் அதற்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
உணவு பற்றாக்குறையை போக்க உணவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்த வேண்டும்,தாயை பாதுகாப்பது போல் காவிரியாற்றையும் நாம் பாதுகாக்க வேண்டும்,உலகிலேயே சிறந்த சமவெளி பகுதியாக நமது டெல்டா பகுதியை நாம் முறையாக பாதுகாக்க வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களில் 240 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது.
கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை,தடுப்பணைகள் அதிகளவில் கட்ட வேண்டும்.நீர் மேலாண்மை முதலீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்வரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன்.
பாமக ஆட்சியில் தற்போது இருந்தால் நிச்சயமாக ரூ. 1லட்சம் கோடி நீர் மேலாண்மைக்காக முதலீடு செய்து இருப்பேன்.
வாக்கை விலை கொடுத்து வாங்குவதுதான் திராவிட மாடல்.
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது பாமக தான்,எம் எல் ஏக்கள் எண்ணிக்கையில் வேண்டுமேயானால் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படலாம் அரசை செயல்பட எதிர்க்கட்சியாக இருப்பது பாமக தான்.
இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தான் அதிகம்.இதனை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்,
நீட் தேர்வு என்பது அராஜகம்,திராவிட மாடலில் வசனம் மட்டுமே நிறைந்துள்ளது.
டெல்டா பகுதியில் அதிகளவில் கொலை நடந்துவருகிறது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இளைஞர்களை மது,சூது போன்ற மும்முனை தாக்குதல் நடந்துவருகிறது, ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 28பேர் தற்கொலை செய்து உள்ளனர்ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய குழு அமைக்கப்பட்டும் இதுவரை தடை செய்யாதது ஏன்,போதை தடுப்பு பிரிவில் 1000க்கும் குறைவான போலீசாரே உள்ளனர்.
அதிகளவில் போதை தடுப்பு பிரிவில் போலீசார் நியமணம் செய்து போதை பொருட்களை தடை செய்யவேண்டும்
அண்ணா பிறந்த நாளுக்கு முன்னரே கும்பகோணத்தை மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும்.
ஐந்தாண்டு ஆட்சியை எங்களிடம் கொடுங்கள் அடுத்த ஐம்பதாண்டு வளர்ச்சிக்கான திட்டத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம்,சமூக நீதிப் பேரவை, உழவர் பேர் இயக்கத்தினர், உள்பட ஆயிரக்கணக்கானோர் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.