BREAKING NEWS

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 12 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆத்தூர், பிரவான்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி(63) என்பவரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள், பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Share this…

CATEGORIES
TAGS