BREAKING NEWS

ஒரு சாதாரண விவசாயி கூட முதலமைச்சர் ஆக முடியும் என்பது அதிமுகவின் வரலாறு – கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..

ஒரு சாதாரண விவசாயி கூட முதலமைச்சர் ஆக முடியும் என்பது அதிமுகவின் வரலாறு – கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம், அதிமுக 51வது ஆண்டு பொன்விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையாபுரத்தில் வைத்து எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

 

விழாவில் கழகப் பேச்சாளர்கள் எம் கே ஜமால் நெல்லை தளவாய் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என் கே பெருமாள் , சின்னப்பன் ஓட்டப்பிடாரம் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் ஒன்றிய நகரச் செயலாளர் என ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

 

 

நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில் :

 

தமிழகத்தில் பலர் கட்சி ஆரம்பித்தார்கள் ராஜாஜி முதல் எஸ்எஸ் சந்திரன், பாக்கியராஜ் டி ராஜேத்திர், ஆகியோர் ஆரம்பித்து காணாமல் போனார்கள் அதேபோல் தேமுதிக ஆரம்பித்து தேய்த்து போனது.

 

 

இப்படி தமிழகத்தில் ஆரம்பித்த கட்சிகள் எல்லாம் காணாமல் போனது ஆனால் என்றைக்கும் மக்கள் மத்தியில் அழியாமல் மக்கள் மனதில் ஆளுங்கட்ச்சியாக இருப்பது தான் அதிமுக

 

அதிமுகவை ஆரம்பித்தார் அதிமுக எம்ஜிஆர் இல்லை, ஜெயலலிதா இல்லை ஆனால் எடப்பாடி ஆட்சியில் மக்களுக்கு பலத்த திட்டங்களை கொண்டு வந்தார்.

 

 

எப்போதும் மூன்றெழுத்துக்கு தனி பெருமை உண்டு அதேபோல் எம்ஜிஆர் ஜெயலலிதா அந்த வரிசையில் இபிஎஸ் அவர்கள் மேலும் ஒருவர் உள்ளார்.  ஆனால் அந்த முதல் எழுத்து ஜீரோவாக உள்ளது அது எப்போதும் ஜீரோ தான் அவரைப் பற்றி பேச தேவையில்லை அதிமுக மீண்டும் புது எழுச்சியுடன் வரும்.

 

அதிமுகவில் முன்னர் நிறைய பேர் பிரிந்து சென்றிருக்கிறார்கள் அவர்கள் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள் சிலர் காணாமல் போன போயிருக்கிறார்கள் ஆனால் என்றைக்கும் அதிமுக சிதறியது இல்லை தற்போது மீண்டும் எழுச்சியுடன் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருவார் வெற்றி பெறுவார்.

 

 

1998-ல்நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தற்போது திமுக ஆட்சியில் கோயம்புத்தூரில் மறுபடியும் நிகழ்ந்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

 

முன்பெல்லாம் மின்சாரத்தை தொட்டால் தான் சரக்கு அடிக்கும் ஆனால் திமுக ஆட்சியிலோ மின் கட்டண ரசீது வந்தலே ஷாக்கடிக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளது.

 

 

இலங்கை போல் தமிழகத்திலும் மக்கள் எழுச்சி பெற்று திமுக ஆட்சி அகற்றப்படும் நாள் வெகு தூரம் இல்லை நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்.நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40-40 ஜெயித்தால் திமுக ஆட்சி தானாக முடிவுக்கு வரும். 

 

ஒரு சாதாரண விவசாயி கூட முதலமைச்சர் ஆக முடியும் என்பது அதிமுகவின் வரலாறு.என்று பேசினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )