ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்ற வளாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வழக்கறிஞர்கள் சமரசமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்.

ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்ற வளாகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் சமரசம் மூலம் பிரச்சணைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வழக்கறிஞர்கள் சமரசமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சார்பாக சமரச மையம் நடத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்றம் வளாகத்தில் இருந்து ஆரம்பித்து..
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது இதனை முதன்மை நீதிபதி துவங்கி வைத்தார்.
கையில் பல்வேறு சமரசம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பியவாறு நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரையில் சென்று பொதுமக்களுக்கு பிரச்சணை வழக்குகள் கணவன் மனைவி பிரச்சணை உள்ளிட்டவைகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் சமரச மையம் மூலம் சுமுகமாக தீர்வு காண்பது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.