ஓமலூர் ஜெய ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் 61 வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் 61 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெய ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளியில் பணியாற்றிய இரு இடைநிலை ஆசிரியைகளின் பணி நிறைவு விழா என இரு பெரும் விழா கொண்டாடப்பட்டது.
இதில்,சிறப்பு விருந்தினராக மதுரை அன்னை பர்னபாஸ் உபகாரமேரி கலந்து கொண்டார்.
மேலும்,பங்கு தந்தை ஜோசப் பால்ராஜ்,ஜான் பிரிட்டோ பள்ளி முதல்வர் அருட் சுந்தர் ,புனித நிகோலஸ் பள்ளி முதல்வர் லியோபால் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி ஆசிரியைகளின் இறை வணக்க பாடலுடன் துவங்கப்பட்ட இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றி பணி நிறைவு பெற்ற கிருஷ்ணமாலா மற்றும் தாமரை செல்வி ஆகிய இரு இடைநிலை ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் பரத நாட்டியம்,வில்லு பாட்டு,சிலம்பம்,நடனம்,நாடகம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை குழந்தைகள் வெளிப்படுத்தினர்.
மேலும்,சென்ற கல்வி ஆண்டில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி பெரிய நாயக மேரி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் ஏராளமான அருட் சகோதரிகள்,தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் .