கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா;

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது மாணவர்களின் கலை நிகழ்ச்சி கட்டுரை போட்டி , ஓவியப் போட்டி, பேச்சி போட்டி, பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை வே.ரேவதி தலைமை தாங்கினார் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் அனைவரையும் வரவேற்றார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பூபாலன், பொருளாளர் பொன்னுதுறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சிமன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சர்க்கரை பொங்கல் வழங்கினார் கல்வியாளர் மூர்த்தி, விடுதி குழு உறுப்பினர் சேகர் பள்ளி மேலான்மை குழு தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.