BREAKING NEWS

கடலூர் அருகே மனு கொடுக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் விபத்தில் சிக்கி படுகாயம் : போலீசார் விசாரணை.

கடலூர் அருகே மனு கொடுக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் விபத்தில் சிக்கி படுகாயம் : போலீசார் விசாரணை.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்

கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பாக நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கட்சியினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம்..

 

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டம், 100 நாள் வேலை திட்டம், ஊராட்சி செயலர்கள் தவறான செயல்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

 

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பெரியநெசலூர் சீனிவாசன் (35) த/பெ செல்வராஜ் தற்போதைய இவர் பாரதிய ஜனதா கட்சியின் நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார். இவரோடு காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (23) இவரும் ஒன்றிய இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஆக உள்ளார். இருவரும் சீனிவாசனுக்கு சொந்தமான TN-91-U9144 Apach பைக்கில் நல்லூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

 

 

அப்போது கண்டப்பன்குறிச்சியை நோக்கி இலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (40) த/பெ சாமிதுரை, தனக்கு சொந்தமான TN-91-V-4333 Swift dzire காரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார் அப்போது காரின் டயர் திடீரென வெடித்தது, இதில் கார் நிலை தடுமாறி சாலையில் தரிக்கிட்டு ஓடி எதிரே வந்த சீனிவாசன், விஜய் ஆகியோர் மீது பலமாக மோதி அருகில் இருந்த நீரேற்று நிலையம் மீது இடித்து நின்றது.

 

 

இந்த விபத்தில் சீனிவாசன், விஜய் இருவருக்கும் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவ்வழியே சென்ற பொதுமக்கள் விபத்து குறித்து உடனடியாக வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடம் வந்த வேப்பூர் போலீசார் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

 

 

மேலும் காரை ஓட்டி வந்த செந்தில்குமாருக்கும் பலத்த அடிபட்டது அவரையும் சிகிச்சைக்காக விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனு கொடுக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் விபத்துக்குள்ளான சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )