கமுதி அருகே செங்கப்படையில் தனியார் சோலார் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு 4 லட்சம் மிளகாய், தக்காளி நாற்று வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை பகுதியில் உள்ள அதாணி சோலார் மின் உற்பத்தி நிறுவனம் சார்பில்,
நேற்று செங்கப்படை ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த வருடத்திற்கான கால்நடை மற்றும் விவசாய திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் மிளகாய் நாற்றுகள் மற்றும் இரண்டு லட்சம் தக்காளி நாற்றுகள், செவாலியர் ரோச்சே சொசைட்டி மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் தனியார் சோலார் நிறுவன தலைமை அதிகாரி பதமநாபன், மனிதவள மேம்பாட்டு துறை சபரிபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிறுவனம் சார்பில் இதன் மக்கள் தொடர்பு அதிகாரி ஜனார்த்தனன் இந்த நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
இதில் வழக்கறிஞர் அப்துல்சமத்சையத், என்ஜிஓ ஒருங்கினைப்பாளர் மேரி, மேலாளர் ஸ்மைல்டன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES இராமநாதபுரம்
TAGS இராமநாதபுரம் மாவட்டம்கமுதிசெங்கப்படை ஊராட்சிசெவாலியர் ரோச்சே சொசைட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்