BREAKING NEWS

கரூரில் கருப்பாய்க் கோவில் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு .மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் காப்பகத்தில் அனுமதிக்க கோரி மனு.

கரூரில் கருப்பாய்க் கோவில் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு .மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் காப்பகத்தில் அனுமதிக்க கோரி மனு.

கரூர் மாவட்டம் கருப்பாய்க் கோயில் தெரு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கரூர் மாநகராட்சி ஆணையரை சந்திக்க வந்த பொழுது தேர்தல் அறிவிப்பு உள்ளதால் புகார் மனுவை தபால் பெட்டியில் மனு அளித்தனர்.

கருப்பாய்க் கோவில் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் 30 வருடங்களாக குடியிருந்து வருகின்றோம் தற்போது எங்கள் தெருவில் குடியிருந்து வரும் புஷ்பா என்பர் தன் மகளுடன் வசித்து வருகிறார்

புஷ்பாவின் உறவினர் அங்கேயர் செல்வி மனநலம் பாதிக்கப்பட்டு ஐந்து வருடங்களாக உள்ளார்.
தற்போது கடந்த இரண்டு மாதங்களாக அதே பகுதியில் தெருவோரத்தில் மற்றும் சாலையில் அமர்ந்து தகாத வார்த்தைகள் பேசியும் சிறுநீர் மலம் கழித்தும் சுகாதார சீர்கேடாக அப்பகுதி மாறி வருகின்றனர்.

பகுதியில் செல்லும் பொது மக்களை கற்களை ஏந்தி
அச்சுறுத்தி வருகிறார் எனவே அங்கேயேர் செல்வியை மனநலம் பாதிக்கப்பட்ட காப்பகத்தில் சேர்க்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் பெட்டியில் மனு அளித்தனர்.

CATEGORIES
TAGS