BREAKING NEWS

கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு பள்ளியில் நடைபெற்றது.

கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு பள்ளியில் நடைபெற்றது.

 

மயிலாடுதுறை ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சி கலைஞரின் வருமுன் காப்போம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம் செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 

இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் துரை மாணிக்கம் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்து அவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

 

உடன் முன்னாள் எம்எல்ஏ சத்தியசீலன். ஒன்றிய செயலாளர். ஒன்றிய பெருந்தலைவர். ஒன்றிய குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர்கள். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செஞ்சி சரண்ராஜ்1வது வார்டு உறுப்பினர் என அனைவரும் கலந்து கொண்டனர்.

 

முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம். பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் இருக்கும் பட்சத்தில் அவர்களை திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். தோல் நோய் மருத்துவம். கண் மருத்துவம்.எலும்பு முறிவு மருத்துவம். பல் மருத்துவம். வாய் புற்றுநோய் மருத்துவம். ஆண்கள் பெண்களுக்கான பொது மருத்துவமும் பார்க்கப்பட்டது.

 

இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது உடலை பரிசோதனை செய்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )