BREAKING NEWS

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு மாதிரி முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு மாதிரி முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி, தத்தங்குடி, மயிலாடுதுறை வட்டம் உளுத்துக்குப்பை, மொழையூர். சீர்காழி வட்டம், மணிக்கிராமம், கீழையூர். தரங்கம்பாடி வட்டம் காளஹஸ்தினாதபுரம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட மாதிரி முகாமினையும்,

 

குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கனுடன் கூடிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் வே.அமுதவல்லி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் கட்டமாக குத்தாலம், மயிலாடுதுறை. சீரகாழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு வட்டங்களுக்குட்பட்ட 211 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட மாதிரி முகாம்கள் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, குத்தாலம் வட்டம், பெருஞ்சேரி, தத்தங்குடி, மயிலாடுதுறை வட்டம் உளுத்துக்குப்பை, மொழையூர், சீர்காழி வட்டம், மணிக்கிராமம், கீழையூர்,

தரங்கம்பாடி வட்டம் காளஹஸ்தினாதபுரம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட மாதிரி முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் திருமதி.வே.அமுதவல்லி இஆப அவர்கள். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. முகாமிற்கு தேவையான பயோ மெட்ரிக் கருவிகள் உள்ளனவா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக அறிந்துள்ளனரா என்பதனை முகாம் அலுவலர்களிடம்கேட்டறிந்தார்.

 

தொடர்ந்து முகாமில் அமைக்கப்பட்டுள்ள தன்னார்வலர் உதவி மையம், விண்ணப்ப பதிவு மையம், விண்ணப்ப பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பணிகள், விண்ணப்ப பதிவு நடைமுறைகள், பொதுமக்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் ஆகியவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கனுடன் கூடிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்திருந்தனர்.

ஆய்வின் போது, பொதுமக்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளையும் உறுதி செய்து கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்கள். மேலும், பள்ளியில் மாணவர்களின் வருகை, மற்றும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதனையும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

 

இந்த ஆய்வுகளின் போது. மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள வினாயகன் அமல்ராஜ், உதவி இயக்குனர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, விஜயலட்சுமி, வட்ட வழங்க அலுவலர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதி வள்ளி, விஸ்வநாதன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS