கல்லிடைக்குறிச்சியில் கரம்பையில் சாலை மறியல்..
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பையில் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சுற்றி பொட்டல் மூலச்சி மலையன்குளம் மாத உடையார் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து திருநெல்வேலி தென்காசி ஆகிய பகுதிகளில் மக்கள் வேலை செய்கிறார்கள் காலேஜ் படிக்கிறார்கள். குழந்தைகள் பாபநாசம் பனிமலையில் இருந்து திருநெல்வேலி செல்லும் 506 என்ற பேருந்தும் டவுன் பஸ் பேருந்தும் கரம்பை பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை.
அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர் ஆதலால் இன்று வழக்கறிஞர் பார்த்திபன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திடீரென பஸ்ஸை மரித்து சாலை மறியல் செய்தனர் உடனே சம்பவம் இடத்திற்கு கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தினர் சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் அம்பாசமுத்திரம் தாசில்தார் மற்றும் பாபநாசம் பணிமனை நிர்வாக இயக்குனர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் இணைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை செய்து பஸ் அந்த ஸ்டாப்பில் நிற்பதற்கு ஆவணம் செய்வோம் என்று உறுதி அளித்தனர் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது சாலை மறியலில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.