BREAKING NEWS

காசநோய் ஒழிப்பு திட்டம் பரிசோதனை ஆய்வு கூடம் திறப்பு விழா.! அமைச்சர் ஆர் காந்தி மற்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.

காசநோய் ஒழிப்பு திட்டம் பரிசோதனை ஆய்வு கூடம் திறப்பு விழா.! அமைச்சர் ஆர் காந்தி மற்றும்  அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்; கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான RPTCR -CBNAAT காசநோய் பரிசோதனை மையத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்கள்.

 

 

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண்ஸ்ருதி, இயக்குநர் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை மரு.செல்வ விநாயகம், வாலாஜா நகரமன்றத் தலைவர் திருமதி.ஹரிணி தில்லை,

 

 

இணை இயக்குனர் மருத்துவப் பணிகள் மரு.விஜயா முரளி, துணை இயக்குனர் காசநோய் மருத்துவர் மரு.ஜெயஸ்ரீ, தலைமை மருத்துவர் மரு.உஷா நந்தினி ஆகியோர் உள்ளனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS