காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை ஜவகர் நேரில் ஆய்வு செய்தார்.
![காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை ஜவகர் நேரில் ஆய்வு செய்தார். காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை ஜவகர் நேரில் ஆய்வு செய்தார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-22-at-4.54.13-PM-e1669121842538.jpeg)
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் உள்ளது. இந்தப் பள்ளியை இன்று காலை தமிழக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்பொழுது பள்ளி மாணவிகளின் கணினி வகுப்பறையை ஆய்வு செய்ததோடு மாணவிகளுக்கு கணினி கல்வி கற்பிக்கும் முறையையும் மாணவிகள் கணினியை பயன்படுத்துவதையும் பார்வையிட்டார். மேலும் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் பள்ளிக்குதேவையான உட் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளைஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
CATEGORIES திருச்சி
TAGS எஸ்.ஜவகர்கல்விகாட்டூரில் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல் நிலைப் பள்ளிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்திருவெறும்பூர்முக்கிய செய்திகள்