BREAKING NEWS

காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 100 கிலோ துவரம் பருப்பு இருசக்கர வாகனம் பறிமுதல் ஒருவர் கைது.

காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 100 கிலோ துவரம் பருப்பு இருசக்கர வாகனம் பறிமுதல் ஒருவர் கைது.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் கீதா அவர்களின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி நந்தகுமார் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் குடிமைப்பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா,

 

காவலர் பாலமுருகன் முதல் நிலைக் காவலர் வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் தமிழக ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து சோதனை மேற்கொண்டதில்,

 

அவர் ராணிப்பேட்டையில் இருந்து தமிழக அரசால் வழங்கப்படும் 50 கிலோ அடங்கிய இரு மூட்டைகளில் 100 கிலோ துவரம் பருப்பை கடத்தி வந்தது தெரிய வந்தது இதனையடுத்து 100 கிலோ துவரம் பருப்பு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் ரேஷன் பருப்பை கடத்தி வந்த நபர் ஆந்திர மாநிலம் சித்தூர் சித்தூர் மாவட்டம் பி.பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பதும்…

 

அவர் ராணிப்பேட்டை மாவட்டம் காரை சந்திப்பு சாலை மற்றும் பிஞ்சி கிராமத்தில் உள்ள நியாய விலை கடைகளில் இருந்து ரேஷன் பருப்பை குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவில் விற்பது விசாரணையில் தெரியவந்தது இதனைய.டுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து ஜெயராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஜெயராமனுக்கு நியாய விலை கடையில் இருந்து துவரம் பருப்பு வழங்கிய காரை சாலை சந்திப்பு நியாய விலை கடை விற்பனையாளர் அறிவழகன், பிஞ்சி நியாயவிலை கடை விற்பனையாளர் சுதாகர், ஆகியார் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

CATEGORIES
TAGS