காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் மகப்பேறு மருத்துவரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் காந்திநகர் இரண்டாவது தெரு பகுதியில் தனியார் மகப்பேறு மருத்துவ கிளினிக் நடத்தி நடத்தி வருபவர் மகப்பேறு மருத்துவர் வசந்தி சந்திரன் இவர் வழக்கம் போல் தனது கிளினிக் முன்பாக தனது ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கிளினிக்கில் உள் சென்றுள்ளார்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் அந்த இருசக்கர வாகனத்தில் சுமார் 4 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று புகுந்துள்ளது இதனை அருகில் இருந்து பார்த்தவர்கள் உடனடியாக மகப்பேறு மருத்துவர் வசந்தி சந்திரனுக்கு தகவல் அளித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர் அருகில் உள்ள இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக்கை அழைத்து வாகனங்களில் பாகங்களை பிரித்தவுடன் அதிலிருந்து சுமார் நான்கு அடி நீளம் உள்ள பாம்பு வேகமாக தப்பிச் செல்ல முயன்றது உடனடியாக பகுதியில் உள்ளவர்கள் கொம்புகளால் தாக்கியதில் பாம்பு இறந்தது இதனையடுத்த அந்த பாம்பை அருகில் உள்ள பாலாற்றங்கரையில் புதைத்தனர்.
எப்பொழுதும் ஆள் நடமாட்டமும் பரபரப்பாகவும் இருக்கும் இடத்தில் சுமார் 4 அடி நீளம் உள்ள பாம்பு இருசக்கர வாகனத்தில் புகுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.