BREAKING NEWS

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா!

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா!

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

 

வேலூர் மாவட்டம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் வண்ண மலர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் விழா கோலாகலமாக நடந்தது. காட்பாடி சார் பதிவாளர் பொறியாளர் பிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்தினார். இதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த சார் பதிவாளர் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். இதை தொடர்ந்து நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கினார் சார் பதிவாளர் பிரகாஷ். இதைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் சுதந்திர தின விழா இனிதே நிறைவு பெற்றது.

CATEGORIES
TAGS