BREAKING NEWS

காட்பாடியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11ம் ஆண்டு புரட்டாசி மாத அன்னதானம் வழங்கும் விழா!

காட்பாடியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11ம் ஆண்டு புரட்டாசி மாத அன்னதானம் வழங்கும் விழா!

வேலூர் மாவட்டம், காட்பாடி கல் புதூர், ராஜீவ் காந்தி நகர், சித்தூர் மெயின் ரோடு பகுதியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா தொடங்கியது.

ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11ம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா புதன்கிழமை (17ஆம் தேதி) தொடங்கியது.

இதை தொடர்ந்து புரட்டாசி மாதம் முழுவதும் அதாவது அக்டோபர் மாதம் 17. 10. 2025 வரை இடைவிடாது காட்பாடி கல்புதூர், சித்தூர் ரோட்டில் உள்ள ஜெயபாலாஜி ஜே. பி. மஹாலில் 24 மணி நேரமும் ஸ்ரீ திருமலை திருப்பதி செல்லும் நடைபாதை அடியார்களுக்கு இடைவிடாது அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு திருமண மண்டபத்தை வாடகை எடுத்து இலவசமாக இந்த தொண்டாற்றி வருகின்றனர் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளையினர். அவர்களது சேவையை சொல்லி மாளாது.

அதாவது 2025 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் முழுவதும் நடைபாதை யாத்திரை வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கு இடம், குளியலறை,

கழிப்பிட வசதி ,குடிநீர் வசதி மற்றும் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்குவதற்கும் இந்த ஜே. பி. மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெய்வீகத் திருத்தொண்டுக்கும், அன்னதானத்திற்கும் தேவையான பொருளுதவி, பண உதவி அனைத்தும் வழங்கி பக்த கோடிகள் உதவி வருகின்றனர்.

அப்படி உதவ விரும்புபவர்கள் இந்த அன்னதான கூட அறக்கட்டளைக்கு பொருளுதவியோ, பண உதவியோ வழங்கி மகிழலாம் என்று அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆண்டு முழுவதும் பாதையாத்திரை வரும் அடியார்களுக்கு இச்சேவை தொடர பிரத்தியேகமான கட்டடங்கள் அமைக்கவும் ,அனைத்து வசதிகளையும்,

அன்னதானமும் வழங்கி தொண்டாற்றி சிறக்க இந்த அறக்கட்டளை சார்பாக கல்புதூர் காட்பாடி, சித்தூர் மெயின் ரோட்டில் மையப் பகுதியில் சுமார் 7000 சதுர அடி பரப்புள்ள காலி இடத்தை வாங்கும் முயற்சியினை மேற்கொண்டுள்ளது.

இதற்கான பூமிதான நன்கொடையாக தங்களால் இயன்ற உதவியை வழங்கி உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது நிர்வாகம்.

இந்நிலையில் புரட்டாசி தொடங்கியதை முன்னிட்டு ஸ்ரீ திருமலை திருப்பதி வேங்கடமுடையான் மலையப்ப சுவாமி அலமேலுமங்கை சமேத வெங்கடாஜலபதி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த ஜெயபாலாஜி திருமண மண்டபத்தில் புரட்டாசி தொடங்கியதை முன்னிட்டு பிற்பகல் 1 மணி அளவில் சிறப்பு பூஜை நடத்தி அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த அன்னதானம் மற்றும் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை நிர்வாகிகள் வெகு விமரிசையாக செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS