காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.
![காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார். காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-18-at-14.14.51.jpeg)
தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சரசுவதி மகால் மற்றும் சங்கீத மகால் அரங்கத்தில் நடைப்பெற்ற காவிரி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து வரவேற்புரையாற்றினார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது, தமிழ் மொழியின் செழுமையினையும் நமது மரபு பண்பாடு, கலை மற்றும் வரலாற்றினை போற்றிடவும் இவற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மூலம் பொது நூலக இயக்க்கம் வாயிலாக தமிழகத்தில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நதி நாகரிகமரபு அடிப்படையில் நான்கு இலக்கியத்திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் முதல் நிகழ்வாக பொருநை இலக்கிய திருவிழாவானது பல இலக்கிய ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட திருநெல்வேலியில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய இரு நாட்களும் இரண்டாவது நிகழ்வாக சென்னை இலக்கியத் திருவிழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 06.01.2023 முதல் 08.01.2023 வரை மூன்று நாட்களும் 100 இலக்கிய ஆளுமைகளுடனும் மூன்றாவது இலக்கியத் திருவிழாவான சிறுவாணி இலக்கியத் திருவிழா 25.02.2023 மற்றும் 26.02.2023 ஆகிய இரு நாட்கள் கோயம்புத்தூரிலும் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய தினம் தமிழ்நாட்டின் பெருமைமிகு, சிறப்புமிகு நதிகளில் என்றும் இளமையும் வளமையும் கொண்ட பொன்னி என சிறப்புபெற்ற காவிரி நதியினைப் போற்றிடும் வகையில், காவிரி நதிக்கரை மக்களின் பண்பாட்டினை நினைவுகூறும் வகையில் அது சார்ந்த இலக்கியம், வாசிப்பு என அறிவார்ந்த பரப்பில் பல ஆளுமைகள் கொண்டு கொண்டாட்டமாக காவிரி இலக்கியத் திருவிழா இன்றும் நாளையும் தஞ்சையில் சரசுவதி மகால் நூலகத்தில் சரஸ்வதி மகால் மற்றும் சங்கீத மகால் என இரண்டு அரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவானது இலக்கியங்களை படைப்பு மற்றும், பண்பாட்டினை மையப்படுத்தி படைப்பரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி மகாலில் படைப்பு அரங்க நிகழ்வுகளும், சங்கீத மகாலில் பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெறும். இவ்விழாவில் 45க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள் 30க்கு மேற்பட்ட தலைப்புகளில் இரண்டு நாட்களும் இலக்கிய விருந்தளிக்க உள்ளார்கள்.
இத்திருவிழாவினைப்பற்றிய விழிப்புணர்வினை மாணவர்களுக்கு ஏற்படுத்து வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்து பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி என பல போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இந்த இரண்டு நாட்கள் இலக்கிய நிகழ்வுகள் முழுமையும் இணையவழி நேரடியாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் யுடியூப் சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு உலகெங்கும் பகிரப்படும்.
காவிரி இலக்கியத் திருவிழா தமிழகத்தின் கலை, பண்பாட்டு மற்றும் மரபினை பிரதிபலிக்கும் விழாகவாக அமையும் என பேசினார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் மேயர் சண்.ரா மநாதன், துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் வாழ்த்ரையாற்றினார்கள், குறுங்கவிதைகள் க.பூரணச்சந்திரன், காவிரிப்படுகையும், இலக்கிமரபுகளும் தங்க ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை பொதுநூலக துணை இயக்குனர் ச.இளங்கோ சந்திரகுமார் நன்றியுரையாற்றினார்.