கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.
![கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர். கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/01/IMG-20230125-WA0280.jpg)
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, அசோக் நகரரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் நேற்று கோவிந்தபேரி, மனோ கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்து 2 பவுண் தங்க செயினை எடுத்துள்ளார். அதனை அப்பெண் சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
மேற்படி நகையை நகை உரிமையாளர் நிலோபர் ஜெமிலா, சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து தெரிவித்ததன் பேரில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் சுபாஷ்ராஜன், விசாரணை மேற்கொண்டு நகை உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
மேலும் நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் அப்பெண்ணிற்கு வெகுமதி மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர் தேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துலெட்சுமி மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS கீழே கிடந்து 2 பவுண் தங்க செயின் காவல் நிலையத்தில் ஒப்படைப்புசேரன்மகாதேவிசேரன்மகாதேவி காவல் நிலையம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்முக்கிய செய்திகள்