BREAKING NEWS

குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் புதுப்பித்தல் புணரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்புச் சுவர் கட்டுமான பணிக்கு பூஜை நடந்தது.

 

இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார்.குத்தாலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா. வைத்தியநாதன்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன்,4-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுகன்யா சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குத்தாலம்.க.அன்பழகன் கலந்துகொண்டு கட்டுமான பணிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.மேலும் விரைவில் பணிகளை தரமாக முடித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS